பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், உடனடியாக விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜான்சிராணி, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக பெண்களும், ஏழை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
Category
🗞
News