தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளாவில் இந்த ஆண்டு அதிக அளவில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதில் கேரளாவில் சில இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் அதிக மழை பெய்ததால் இந்த ஆண்டு அரிசி உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, தமிழகத்துக்கு தேவையான நீர் வந்தடைந்தது. இதனால் தமிழகத்திலும் நெல் அறுவடை அதிகரித்தது.
Category
🗞
News