தீபாவளிக்கு 22-ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்- போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்- வீடியோ

  • 6 years ago
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5-இடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் 22-ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 5-இடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் 22-ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். என்றும் போதுமான பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது.தேவைக்கேற்றவாறு இயக்கப்படும் என்றார்.இதன் மூலம் ஓட்டுனர்,நடத்துனர்,பயணிகளுக்கு எந்தவிதமான சிரமும் ஏற்படாது என்றார். அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஷட்டரும் இல்லை,பிரேக்கும் இல்லாமல் பேருந்தை எப்படி இயக்குவது என்பது தொடர்பான வீடியோ சமூக வளைத்தளத்தில்பரவியது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு,இது குறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுனரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 22-ஆயிரம் பேருந்துகளில் 10-வயதை கடந்த பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.நிதிநிலைமை சிரமத்தின் காரணமாக மழைகாலத்திற்கு முன்னரே பேருந்து கூரையின் மீது தார் பாய் அமைக்கும்பணிகளை செய்து உள்ளோம்.இதிலும் ஓரிறு பேருந்துகளில் இது போன்ற குறைகள் இருக்கலாம். இருந்தாலும் அதனையும் சீரமைத்து தான் வருகிறோம் என்றார்.

Des: Transport Minister vijayabasker said that 22-thousand buses would be operated across Tamil Nadu from 5 places in Chennai for Diwali festival.

Recommended