மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி- வீடியோ

  • 6 years ago
பழனி அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் உயிர் பலி வாங்க காத்திருக்கும் குடிநீர் மேல்நிலைத் தொட்டி மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஆண்டிபட்டி கிராமம் பழைய தெருவில் உள்ளது மேல்நிலை குடிநீர்த் தொட்டி.இந்த குடிநீர்த் தொட்டி கடந்த 2003 ம் ஆண்டு 3,லட்சத்து 46,ஆயிரம் ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டு குடிநீருக்காக பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டது.
இந்த தொட்டி விரிசல் ஏற்ப்பட்டு கடந்த 2013_2014 ஆம் ஆண்டில் ஒன்றிய ஊராட்சி அலுவலகம் சார்பில் 60,000 ஆயிரம் நிதி ஒதுக்கி மறுசீரமைப்பு செய்தனர்.ஆனால் தற்ப்போது இந்த தொட்டி மிகவும் மோசமாக இடிந்து விழும் தருவாயில் உள்ளது.இந்த குடிநீர் தொட்டியை சார்ந்து கிட்டதட்ட 150 குடும்பங்களுக்கு மேல் வாழ்கின்றனர்.எனவே இந்த தொட்டி இடிந்து விழுந்து உயிர் பலி வாங்கும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொட்டியை ஆய்வு செய்து மறு சீரமைப்பு செய்து தரவேண்டும் என்று ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Des: The local authorities have demanded the authorities to take action to close the drinking water overhead tank in the Andipatti village near Palani.

Recommended