பிரிமியர் கார்களின் ஜாம்பவான் ஜாகுவாரின் புதிய எக்ஸ்எப் 20டி

  • 5 years ago
ஜாகுவார் கார்களுக்கு அழகை கொடுக்கும் கம்பீரமான முகப்பு க்ரில் அமைப்பு, அதன் நடுவில் ஜாகுவார் இலட்சினையும் கவர்ச்சியாக இருக்கிறது. ஹெட்லைட் ஹவுசிங்கில் இடம்பெற்றிருக்கும் பகல்நேர விளக்குகள் வசீகரத்தை தருகின்றன. இந்த காரில் 9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் வடிவத்திற்கு சற்றே சிறியதாக தெரிகிறது. மெரிடியன் ஆடியோ சிஸ்டம் சிறப்பான ஒலி தரத்தை வெளிப்படுத்துகிறது.
புதிய ஜாகுவார் எக்ஸ்இ 20டீ காரில் 300 லிட்டர் பூட்ரூம் இடவசதி உள்ளது. அகலமாக இருப்பதால், பொருட்களை உள்ளே வைத்து எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 228 கிமீ வேகம் வரை அதிகபட்சமாக தொடும் வல்லமையை பெற்றிருக்கிறது.ஜாகுவார் நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு கார் மாடலாக விற்பனை செய்யப்படும் இந்த கார் இந்தியாவில் ரூ.43.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.