• 5 years ago
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தக்கோரி, கோவையில் சாலைமறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கு தொடர்பாக உரிய விசாரணை கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது இவ்வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தொடர்பு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தினர்.

Pollachi issue : Naam Tamilar Katchi Protest

#Pollachi

Category

🗞
News

Recommended