கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் வாக்கு சேகரித்தார்

  • 5 years ago
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று கரூர் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பன்குறிச்சி செவ்வந்திப்பாளையம் வாங்கல் உட்பட்ட மேட்டுபாளையம்,கடம்பன்குறிச்சி,சின்ன மற்றும் பெரிய வரப்பாளையம்,பால்வார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார் .தங்களுடைய தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.வழி நெடுகிலும் ஏராளாமன பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.அதை தொடர்ந்து பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி வாக்கு சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சின்னச்சாமி செந்தில் பாலாஜி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சென்று வருகின்றனர் வாங்கல் கடையை பகுதியில் கூடியிருந்த பொதுமக்களிடம் ஜோதிமணி திறந்த ஜீப்பில் நின்றுகொண்டு பேசினார். அப்போது வாங்கல் பகுதியில் காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் விவசாய பூமியாக உள்ளது அனைத்து விவசாய விளைபொருட்களும் உடனடியாக விற்பனை ஆகவில்லை நாட்கணக்கில் வாரக்கணக்கில் ஆகிறது. எனவே, விவசாய பொருட்களை பாதுகாக்க நான் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் விளை பொருட்களையும் பாதுகாக்கின்ற குளிர்பதன கிடங்குகள் அமைப்பேன். மத்திய மத்தியிலே ராகுல் காந்தி பிரதமராக தேர்வு பெரும்போதும் தமிழகத்திலே திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரானதும் விவசாயி அனைத்து விவசாய கடன்களும், கல்வி கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு பதிலாக நீங்கள் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கின்றேன். கரூர் தொகுதி உருப்பட வேண்டுமென்றால் கரூர் தொகுதியில் பாராளுமன்றத்தில் குரல் ஒலிக்க வேண்டும் என்றால் தம்பிதுரையை நீங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னால் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பிதுரையும் அமைச்சர் விஜயபாஸ்கரும் என்னை திட்டுவதையே வேலையாக வைத்துள்ளனர்.ஓட்டு கேட்கிறதல மக்களுக்கு என்ன செய்தோங்கறதல அவர்களிடம் எதுவும் இல்லை.தம்பிதுரை கடந்த பத்து வருடங்களாக இருந்தும் மத்திய அரசிடம் நிதி பெற்று எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை.தம்பிதுரைக்கு தோல்வி பயம் வந்தவிட்டது.என்றார்

Recommended