• 5 years ago
பங்குச்சந்தை முதலீட்டில் 'இந்த'த் தவறை எப்போதும் கூடாது..!

பங்குச் சந்தை எப்போதும் முதலீட்டாளர்களை ஒரு வகையான பயத்திலேயே வைத்திருக்கிறது. காரணம் பணம்

வாழ்வில் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைத் தான் நாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறோம். இத்தகைய முக்கியமான முதலீட்டில் இந்தத் தவறுகளை நாம் ஒருபோது செய்துவிடக் கூடாது.

1. ஒரு துறையின் வர்த்தகம் உங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை எனில் அதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

2. ஒரு நிறுவனம் நமக்கு லாபம் கொடுத்துவிட்டால் அதன் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைப்போம். இது மிகப்பெரிய தவறு, எப்போதும் இதைச் செய்யாதீர்கள், முதலீடு செய்தது லாபம் பெறத் தான். எனவே எப்போதும் முதலீட்டின் மீது உஷாராக இருங்கள்.

3. ஒரு முதலீடு லாபம் தரவில்லை எனில் அதை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும். காத்திருங்கள். பொறுமையை இழந்தால் பங்குச்சந்தையில் எப்போதும் லாபம் பெற முடியாது.

4. பங்குச்சந்தையில் எப்போதும் ஓரே இடத்தில் முதலீடு செய்யக்கூடாது. பல துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும்

5. சந்தையை முழுமையாக யாராலும் கணிக்க முடியாது. எனவே எப்போதும் சரியான நேரத்தில் முதலீடு செய்யத் திட்டமிடுங்கள்.

Category

🗞
News

Recommended