Tomato Price Fall : தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. கிலோ ரூபாய் 12-க்கு விற்பனை- வீடியோ

  • 5 years ago
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு ஆந்திரா தக்காளி வரத்து அதிகரித்தால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, பஞ்சபள்ளி, பெல்ரம்பட்டி, வெள்ளிச்சந்தை சாமனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தடககாளி சாகுபடி செய்துள்ளனர் இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்தால், பாலக்கோடு மார்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளது. பாலக்கோடு தக்காளி மார்கெட்டில் கடந்த வாரம் கிலே ரூபாய் 40-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூபாய் 12-க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் கடந்த வாரம் 20 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூபாய் 800 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்பட்டது தற்போது 20 கிலோ கொண்ட பெட்டி ரூபாய் 200 முதல் ரூபாய் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது இது குறித்து விவசாயிகள் வறட்சியால் தண்ணீர் இல்லாமல் சொட்டு நீர் பாசனம் மூலம் தக்காளி சாகுபடி செய்து விளைச்சலை மேற்கொண்டோம் இந்தநிலையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகளுக்கு பெறும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பாலக்கோடு அல்லது ராயக்கோட்டை பகுதிகளில் தக்காளிச்சாறு தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் தக்காளி வரத்தை குறைத்து அவர்களை வேறு மாநிலத்திலேயே விற்பனை செய்தால் பாலக்கோடு பகுதி விவசாயிகளின் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கும் எனவே இதனை நடைமுறைக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

des : Tomato prices fall by Rs 12 a kg