• 6 years ago
விஜய்க்கு ஒரு பெரும் மாஸ் ரசிகர்களையும் தாண்டி இளைஞர்கள், இளம் பெண்கள் என பலரின் மனதிலும் இருக்கிறது. அதே வேளையில் அவரின் பெயரை கொண்டு சமூகவலைதளங்களில் சிலர் நடந்துகொள்ளும் விதம் முகம் சுளிப்பை காட்டுகிறது.

அண்மையில் அவர் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பலருக்கும் நினைவிருக்கும் தானே. இப்போது வரை அது அரசியல் சர்ச்சையாக ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மையான திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கருத்தை வெளிப்படுத்தினார்.

நேற்று கிருஷ்ணகிரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி திருமூர்த்தி கண்ணான கண்ணே பாடலை பாடியது பலரையும் ஈர்த்தது. வீடியோவும் வைரலானது.

அவரின் செல்போன் நம்பரை கேட்டு வாங்கி அழைத்து பேசி விஸ்வாசம் பாடலாசிரியர் இமான் வாய்ப்பு வழங்குவதாக கூறியிருந்தார்.

இதை குறிக்கும் விதமாக விஜய் பிகில் மேடையில் பேசியதை கொண்டு மீம் உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். இது தற்போது வைரலாகிவருகிறது.



கிருஷ்ணகிரி மாவட்டம். #நொச்சிப்பட்டி எனும்
ஓர் அழகிய கிராமத்தில் பிறந்தவர்
செல்வன்.தி#திருமூர்த்தி அவர்களின்
#கண்ணாண_கண்ணே (விஸ்வாசம் படத்தில்) தற்பொழுது உங்களுக்காக ரிக்கார்டிங் செய்யப்பட்டது.

இவரின் குரலாலும்/பாடலாலும் அந்த
ஊரையே இவர் வசம் வைய்த்துள்ளார்.

(பார்வையற்றவர்/சிறும் வயதிலே தாயை இழந்துவர்)
ஆனாலும் என்றும் தன்தாய் நினைப்பில்
இன்னும் இதுபோன்ற பாடல்களை பாடிக்கொண்டே
தான் இருக்கிறார்.

இந்த பார்வையற்ற இசைப்பிரியனையும்
கலைஞனையும் மனதார பாராட்டி
இந்த பாடலை சேர் செய்வோமே??.....

Category

😹
Fun

Recommended