சென்னை தண்டையார்பேட்டையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழலில், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரஜினி மக்கள் மன்றத்தின் ஆர்.கே.நகர் பகுதி நிர்வாகிகள் சார்பில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
Category
🗞
News