• 4 years ago
#Budget2020-21, #PasumaiVikatanBudgetMeeting
பசுமை விகடன் நடத்திய பட்ஜெட் கூட்டத்தின் சிறப்பம்சங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலின்போது ஆட்சிலியிருக்கும் கட்சியின் தேர்தல் அறிக்கைகள், அவ்வப்போது நிகழும் பொருளாதார சூழலுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டின் சாராம்சங்கள்தான் இருக்கும். இந்த முறை மத்திய நிதியமைச்சகம் வேளாண்மை சம்பந்தமாகப் பட்ஜெட்டில் இடம் பெறவிருக்கும் அம்சங்கள் குறித்து பொது மக்களிடமும், நிறுவனங்களிடமும் கருத்துகள் கேட்டது. விவசாயம், பாசனம், சுற்றுச்சூழல் சம்பந்தமாகச் சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்துகளை மட்டும் கேட்காமல், அந்தக் கருத்துகள் குறித்து விவாதித்துச் சரியானவற்றை பட்ஜெட்டில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பசுமை விகடன் சார்பில் ‘மத்திய, மாநில பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்’ என்ற தலைப்பில் முன் ஆலோசனைக் கூட்டம் சென்னை, மெட்ரோ மேனர் ஹோட்டலில் நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயப் பொருளாதாரம், இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் குறித்து பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: பசுமைக் குழு
வீடியோ ஒருங்கிணைப்பு: த.ஜெயகுமார்
வீடியோ: கார்த்திக்
எடிட்டிங்: சுரேந்தர்

Category

📺
TV

Recommended