மாற்றுத்திறனாளிகள் அல்ல... மாண்புமிகு திறனாளிகள்..! சிலிர்க்க வைக்கும் வெற்றிக்கதைகள்!

  • 4 years ago
மாற்றுத்திறனாளிகளை இந்தச் சமூகம் தகுதிக் குறைவானவர்களாகவே பார்க்கிறது. அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. பொது இடங்களில் எங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் இல்லை. பிறப்பிலோ அல்லது இடைப்பட்ட காலத்தில் விபத்தின் காரணமாகவோ உடல் உறுப்புகளை இழந்து இயல்பு வாழ்க்கையைத் தொலைத்துவிடும் மனிதர்கள், வாழ்நாள் முழுக்க, துயரங்களைச் சுமந்துகொண்டே வாழவேண்டியிருக்கிறது.

இந்தச் சூழலில், எல்லா இடர்பாடுகளையும் எதிர்கொண்டு முன்மாதிரி மனிதர்களாக உயர்ந்து நிற்கும் மாற்றுத்திறனாளிகளும் நம்மிடையே வசிக்கத்தான் செய்கிறார்கள். அப்படியான 'மாண்புமிகு திறனாளி'களை அழைத்து, உரையாடி அவர்களின் அனுபவங்களைப் பகிரச்செய்யும் ஒரு நிகழ்வை அஸ்ட்ரா ஹியரிங் கேர் நிறுவனமும் டாக்டர் விகடனும் நடத்தின. மனநல மருத்துவர் சுபா சார்லஸ் அந்த நிகழ்வை வழிநடத்தினார். அதில், மாற்றுத்திறனாளிகள் சிலர் பகிர்ந்துகொண்ட உற்சாகமூட்டும் கதைகள்... உங்களுக்காக!



Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS :
Script and Co-ordination: Ve.Neelakandan, R.Vaidehi, Balu sathya
An Initiate By : Astra Hearing Care & Doctor Vikatan | Camera - | Edit -

Recommended