Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/6/2020
Reporter- கு.ஆனந்தராஜ்
Camera -சொ.பாலசுப்ரமணியன்

எந்தவொரு உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு பொருளைத் தயார் செய்து அதில் பெயர் பெற வேண்டும். அப்போதுதான் பிசினஸில் நிலைத்து நிற்க முடியும் என்பது பிசினஸ் பாலபாடம். அந்த வகையில், பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் மற்றும் வேலட்டுகளை மட்டுமே தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வருகிறார்கள் சென்னையைச் சேர்ந்த அசோக்கும் ஸ்ரீதரனும். சென்னை பல்லாவரத்தில் ‘பத்மாஷ் லெதர்ஸ் அண்டு எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் உற்பத்திக்கூடத்தில் அவர்களைச் சந்தித்தோம். முதலில் பேச ஆரம்பித்தார் அசோக்.
“நானும் என் மச்சானும் இணைந்து 1991-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது 40 நேரடி ஊழியர்களுடன் நடுத்தர அளவில்தான் தொழிலை நடத்தினோம். வெளிநாடுகளில் ஆண்களுக்கான வேலட்டுகளுக்கு அதிக வரவேற்பு உண்டு. சில டிசைன்களில் ஆண்களுக்கான வேலட்டுகளை மட்டும் வருடத்துக்கு சில லட்சம் எண்ணிக்கையில் தயாரித்து ஏற்றுமதி செய்தோம். தொடத்தில் ஏறுமுகத்தில் இருந்தாலும், பிறகு சில காரணங்களால் தொழிலில் சரிவு ஏற்பட்டது.

Category

🗞
News

Recommended