சிக்குகிறார் சசிகலா கணவர் : TOYOTA LEXUS CS300 CAR

  • 4 years ago
வெளிநாட்டுக் கார்களை இந்தியாவில் ஓட்டுவது சட்டப்படி குற்றமா?

இல்லை; முறைப்படி அதற்கென வரி கட்டிவிட்டால், நீங்கள் ஃபெராரியில் உசிலம்பட்டியில்கூட சவாரி செய்யலாம். இந்திய கார்களின் சந்தை மதிப்பு உயர வேண்டும் என்பதற்காகத்தான், அரசாங்கம் கடுமையான வரி விதித்திருக்கிறது. அதாவது, வெளிநாட்டுக் கார்களை இறக்குமதிசெய்தால், அதற்கென 170%-ல் இருந்து 200% வரை சுங்கவரி செலுத்த வேண்டும். பைக்குகள் என்றால், 140%. அதாவது, வெளிநாட்டில் விற்கப்படும் ஒரு கோடி ரூபாய் காரை இந்தியாவில் நீங்கள் முறைப்படி ஓட்ட வேண்டும் என்றால், கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். இதனால் அரசாங்கத்துக்குப் பெருத்த லாபம் கிடைக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், தனவான்களுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா? ‘ஜஸ்ட் லைக் தட்’ இதை, டீல் செய்யும் கோடீஸ்வரர்களும் இருக்கிறார்கள்; 'ஜஸ்ட் லைக் தட்' - இந்த விஷயத்தை டீலில் விட்டவர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டிலுமே, அநேகமாக சென்னை முதல் இடமாக இருக்கலாம்.

Recommended