• 4 years ago
திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரி தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்

தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இயற்கையின் அழைப்பால் உயிர் நீத்த செல்வத்தின் மூன்றாவது மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்தில், தந்தையை அழைத்து வரும் விதமாக இரண்டு சகோதரிகள் இணைந்து தந்தையின் சிலையை மேடைக்கு எடுத்து வந்து இன்ப அதிர்ச்சி அளித்தனர். சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சிலிக்கானை கொண்டு தந்தையின் முழு உருவ சிலை கொண்டு வந்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தந்தையே மீண்டும் உயிருடன் வந்ததாக எண்ணி மகிழ்ச்சி அடைந்த மணபெண் தந்தையின் சிலைக்கு முன்பாக மாலை மாற்றி கொண்டு, திருமணம் செய்து கொண்டனர். இந்த மொத்த நிகழ்வும் திருமண விழாவிற்கு வந்திருந்தவர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்தது.

Category

🗞
News

Recommended