• 4 years ago
ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் தலைவராக உள்ள அயதுல்லா அலி கமேனி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் கார்ட்டூன் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் இதுகுறித்து விளக்கமளித்த அவர், நாட்டில் இருக்கும் இளம் தலைமுறையினரிடையே ஹிஜாப் அணியும் பழக்கம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Category

🗞
News

Recommended