• 4 years ago
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 94வது நாளை எட்டியுள்ளது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர் தோல்வியில் முடிந்து வருகின்றன. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதியாக உள்ள நிலையில், வேளாண் சட்ட்ங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகளும் உறுதியாக உள்ளனர். இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 94வது நாளாக நடைபெற்று வருகிறது.

Category

🗞
News

Recommended