• 4 years ago
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியதுதான் சமூக நீதியா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் பண்பாட்டை காக்கிறேன் என்று கூறியவர்கள் கீழடியை கைவிட்டுவிட்டார்கள் என்றும் கூவம் நதியை தேம்ஸ் நதியாக மாற்றுகிறேன் என்று சொன்னவர்கள் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் சமூக நீதியை குத்தகைக்கு எடுத்தவர்கள் உதட்டு அளவில் தான் பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவ்வாறு பேசுபவர்கள் சமூக நீதியை, உங்கள் உயர்வுக்கு நாங்கள் போட்ட பிச்சைதான் என்று பேசுகின்றனர் எனவும் தெரிவித்தார். சமூக நீதி பிச்சையல்ல, உரிமை என்று கூறிய கமல்ஹாசன், சமூக நீதியை பேசியவர்கள், தன்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதை சுட்டிக்காட்டினார். திருமாவளவன் மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேண்டி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Category

🗞
News

Recommended