• 3 years ago
கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் – பக்தர்கள் திராளானோர் பங்கேற்று காலபைரவர் அருள் பெற்றனர்

கரூர் நகரின் மையப்பகுதியில் அமைந்து வீற்று அருள்பாலிக்கும் கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ செளந்தரநாயகி உடனுறையாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பரிவார தெய்வங்களில் ஒன்றான காக்கும் கடவுளான காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அதுவும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு விஷேச அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனைகளாக கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தியை தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ காலபைரவர் அருள் பெற்றனர். மேலும், காக்கும் கடவுள் காலபைரவரை வழிபட ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி. அந்த வகையில் இன்று தேய்பிறை அஷ்டமி. சனிபகவானின் குரு காலபைரவர் என்பதால் இன்றைய தினம் பைரவரை வழிபட சனி தோஷங்களும், சகல தோஷங்களும் நீங்கும். கால பைரவர் வழிபாடு நம்மை எல்லா வகையான கெடுதல்களில் இருந்தும் காப்பாற்றும். கால பைரவர் வழிபாடு நமக்கு அரண் போன்றது. பைரவர் என்றாலே பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும் என்பது ஐதீகம், ஆகும், மேலும், தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான் என்பதினால் பக்தர்கள் காலபைரவரை மனதார வணங்கி சென்றனர்.

Category

📺
TV

Recommended