Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/16/2021
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானோடு சந்தித்து அரட்டை அடித்து ஃபோட்டோவிற்கு ஃபோஸ் கொடுக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் இதை விட ஆச்சரியமான சந்திப்பு ஒன்று மத்திய கிழக்கில் நடந்திருக்கிறது.

இஸ்ரேலும், அரபு நாடுகளும் எலியும் பூனையும் போல எதிரெதிர் நாடுகள் என்பது உலகறிந்த உண்மை. இந்த நிலையை ஒரு அரபு நாடு மாற்றியிருக்கிறது. இதுதான் இப்போதைய பிரேக்கிங் நியூஸ்.

இஸ்ரேலும், யுனைட்டட் அராஃப் எமிரேட்ஸ் எனப்படும் அமீரகமும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை டிசம்பர் 13 திங்களன்று வெளியிட்டுள்ளன. இதில் இருநாடுகளும் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதியை நிறுவ திட்டமிட்டுள்ளன.

இதன்படி இருநாடுகளும் பொருளாதார, தொழில்நுட்ப துறைகளில் இருக்கும் காலநிலை மாற்றம், பாலைவனமாக்கல், தூய்மையான எரிசக்தி போன்ற சவால்களுக்கு விடை காண இருக்கின்றன. இஸ்ரேல் பிரதமர் நஃப்த்தாலி பென்னட், அமீரகத்தின் அபுதாபி நகரில், பட்டத்து இளவரசர் முகமட் பின் சயத்தை சந்தித்த பின் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வளைகுடா நாடு ஒன்றிற்கு இஸ்ரேலின் தலைவர் அதிகாரப்பூர்வமாக செல்வது இதுவே முதல் முறை. ஈரான் – இஸ்ரேலை வைத்து மத்திய கிழக்கு நாடுகளின் பதட்டம் உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

Category

🗞
News

Recommended