• 2 years ago
வைரஸ்களின் பரிணாம சுழற்சியில் அவற்றுள் பல்வேறு மரபணுக்கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பல உருமாற்றங்களை அவை சந்திக்கின்றன. கொரோனா வைரஸும் அது தோன்றிய நாளிலிருந்து பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. ஆல்பா, பீட்டா, டெல்டா என உருமாற்றங்கள் நடந்துவந்த சூழலில், தற்போது `ஒமைக்ரான்’ என்ற பெயருடன் உருமாற்றம் அடைந்துள்ளது கொரோனா வைரஸ். ஒமைக்ரான் உருமாற்றம் விரைவில் தொற்றும் தன்மையுடன் இருப்பதால், வெகு விரைவாக அலையின் உச்சத்துக்குச் செல்லலாம்; இதுவரை நேர்ந்த உருமாற்றங்களில் இந்த ஒமைக்ரான்தான் மிகவும் வேகமாகத் தொற்றக்கூடியது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது நமக்கான எச்சரிக்கையே தவிர, பீதியடையத் தேவையில்லை.

Category

🗞
News

Recommended