கோவில்பட்டியில் கையில் ஏர் கலப்பையுடன் களமிறங்கிய வைகோ | Oneindia tamil

  • 7 years ago
விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்தி, மதிமுக சார்பில் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வைகோ தலைமை வகித்தார். இதில், பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த விவசாயி முனியசாமி கலப்பையுடன் வந்திருந்தார். அவரிடமிருந்து கலப்பையைப் பெற்றுக் கொண்ட வைகோ, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.கையில் ஏர்கலப்பை ஏந்தி வைகோ ஆர்பாட்டம் நடத்தினார். ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசிய வைகோ, தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்யும் விவசாயிகள் எதிர்பாராத வறட்சி, இயற்கைப் பேரிடர் காரணமாக உரிய விளைச்சலைப் பெற முடியாத வேளைகளில் பெருநட்டங்களில் இருந்து அவர்களை ஓரளவு காப்பாற்ற பயிர்க் காப்பீட்டு திட்டம் நடை முறையில் உள்ளது.பாதிக்கப்படும் விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற தத்தமது பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவு காப்பீட்டுக் கட்டணம் செலுத்தி விடுகின்றனர். அவ்வாறு பயிர்க் காப்பீட்டுக் கட்டணம் செலுத்திய விவசாயிகள், தங்கள் நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் வறட்சி, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் உரிய விளைச்சலைப் பெற முடியாத சூழலில் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பயிர்க்காப்பீட்டு நிவாரணத் தொகையினை அரசு வழங்க வேண்டும்.

MDMK general secretary Vaiko lead a protest in Kovilpatti against delay in disbursal of crop insurance. Aggrieved farmers from Thoothukudi, Tirunelveli and Virudhunagar distrticts took part in the protest. he said.


Recommended