வர்தா புயலில் வேட்டியை மடித்துக்கொண்டு களமிறங்கி கலக்கினாரே ஓபிஎஸ்!- வீடியோ

  • 7 years ago
கடந்த ஆண்டு சென்னையை வர்தா புயல் தாக்கியபோது அப்போதைய முதல்வரும் தற்போதைய துணைமுதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் செய்த பணியை யாராலும் மறக்க முடியாது. புயல் தாக்கும் முன்பும், புயல் தாக்கிய பின்னரும் அவரது உடனடி மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் சென்னையை உடனடியாக மீட்டெடுத்தது. ஆனால் தற்போதைய மழைக்காலத்தில் மக்கள் ஓ.பி.எஸ்ஸை நினைவு கூருகிறார்கள். ஓபிஎஸ் அன்று செய்த காரியங்களை மக்கள் நினைவு கூர்ந்து பேசிக் கொள்கிறார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வர்தா புயல் கரையை கடந்த போது அப்பொழுது மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகள், வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என பல இடங்களில் மரங்கள் ஒடிந்து விழுந்தன.மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. உடனடியாக களமிறங்கிய அப்போதய முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், புயல் மற்றும் மழையினால் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் 100 நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் 50 தொற்று நோய் தடுப்பு குழுக்கள் அமைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்தார்.

People still remembers then CM OPS's work during cyclone Vardah when it hit Coastal Tamil Nadu in the last year.

Category

🗞
News

Recommended