• 8 years ago
வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடங்கியது முதலே தீவிரம் காட்டியது.
சென்னையில் ஒருவாரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. அதிகளவாக சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஒரே இரவில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது

இதனால் மெரினா, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
சென்னைக்கு குடிநீடி கொடுக்கும் ஏரிகளும் நிரம்பியது. இதனால் சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் சென்னையில் தனியார் நிலத்தடி நீர் ஆய்வு அமைப்பு ஆய்வு செய்தது. அதில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது

The Chennai ground water level has increased in many places of the city due to north east monsoon. Mayilapore, T Nagar area ground water level has increased upto 10 feet

Category

🗞
News

Recommended