#Rain Update! கனமழைக்கு வாய்ப்பு- வீடியோ

  • 7 years ago
தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிக அளவு மழைப் பொழிவாக நாகை மாவட்டம் தலைஞாயிறுவில் 27 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை வரை நிலவி வருகிறது.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடலோரங்களில் அனேக இடங்களில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் பரவலான மழை இருக்கும் என்றார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடைவெளிவிட்டு சில நேரம் கனமழையும் இரவு இடியுடன் மழை பெய்யும். சில நேரம் பலத்த மழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Several parts of Nagapattinam district continuing to receive moderate to heavy rainfall, three relief centres started functioning in the district. Talaignayuru recording 27 CM during the 24-hour period on Saturday.

Recommended