அறம் - மாற்று சினிமா; மக்களுக்கான சினிமா!- வீடியோ

  • 7 years ago
தமிழ் அகராதி தவிர்த்து, ஆள்பவர்கள் - வாழ்பவர்கள் அத்தனை பேரின் அடிமனதிலிருந்து அடியோடு துடைத்தெடுக்கப்பட்ட வார்த்தையை... எளிய மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்திருக்கிறார் இயக்குனர் கோபி நயினார் - 'அறம்'!
டாப் ஹீரோக்கள் தவிர்த்து முன்னிலையில் இருக்கும் ஹீரோக்களுக்கு சற்றும் குறையாத சம்பளம் வாங்கும் முன்னணி நடிகை - சொல்லப்போனால் நடிகைகளில் சூப்பர் ஸ்டார். அந்த அடையாளங்களை முற்றிலுமாகத் தூக்கியெறிந்துவிட்டு... மக்களின் வாழ்வை நிஜத்துக்கு நெருக்கமாக நின்று பதிவு செய்யும் முயற்சிக்கு நயன்தாரா ஒப்புக்கொண்டது - இந்திய சினிமா இதுவரை கண்டிராத ஒன்று! முப்பது ஆண்டுகளாக மூச்சைப் பிடித்துக்கொண்டு, முங்கு நீச்சல் அடித்துக்கொண்டிருந்த நல்ல படைப்பாளியைக் கைபிடித்துக் கரை சேர்த்ததற்கு 'நன்றி' என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது 'அறம்' அல்ல! . பொதுவாக கூடுதல் பணம் சேர்ந்தபிறகு கோயில் உண்டியலில் காணிக்கை போடுவார்கள். நயன்தாரா, தன்னை வாழவைத்த சினிமாவுக்கே திருப்பி காணிக்கை செலுத்தியிருக்கிறார்! நல்ல சினிமா விரும்பும் மனிதர்கள் உள்ளவரை உங்கள் 'அறம்' நினைவில் கொள்ளப்படும்.

VK Sundar's views and comments on Nayanthara's Aramm movie.

You’re free to use this song in any of your videos, but you must include the following in your video description:
Essence 2 by Audionautix is licensed under a Creative Commons Attribution license (https://creativecommons.org/licenses/by/4.0/)
Artist: http://audionautix.com/

Recommended