• 8 years ago
டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.
கும்பம் ராசிக்கு இதுவரை 10ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி லாப ஸ்தானத்தில் அதாவது ராசிக்கு 11வது இடத்திர் சஞ்சாரம் செய்யப் போகிறார்.
சனிபகவான் தனுசு ராசியில் இருந்து உங்கள் ராசியையும் வது இடம்,5வது இடம், 8 வது இடங்களைப் பார்க்கிறார். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.கும்ப ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்களுக்கு கரும சனியாக இருந்தவர் லாப சனியாக இடப்பெயர்ச்சி அடைகிறார். ராசிக்கு 10வது இடத்தில் இருந்த போது பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி எல்லாம் லாபமாகவே இருக்கும்.

லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். கும்பராசியின் அதிபதி சனிபகவான். உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். ஏற்கனவே பாக்ய ஸ்தான குருவினால் நன்மைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

குரு ஏற்கனவே உங்கள் ராசியை 5வது பார்வையாக பார்க்கிறார். சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள்.

7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே புத்திரர்களால் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.


Sanipeyarachi 2017 palangal parikarangal for Kumbam rasi. Details palangal for Avittam,Sathayam and Poorattathi Stars

Dreamy Flashback Kevin MacLeod (incompetech.com)
Licensed under Creative Commons: By Attribution 3.0 License
http://creativecommons.org/licenses/by/3.0/

Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: https://incompetech.com/music/royalty...

Recommended