Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/13/2018
தமிழகத்தில் இருந்து வரும் பனிச் சூழல் விரைவில் விலகி வெயில் கொளுத்தப் போகிறது. இந்த முறை அதிக அளவிலான வெயிலை சந்திக்க வேண்டியிருக்கலாம் என்று வானிலை மையமும் கூறியுள்ளது. தமிழகத்தில் தற்போது பனிக்காலம் இன்னும் விலகாமல் உள்ளது. தொடர் பனி காரணமாகவும், அதிக அளவில் இந்த முறை பனி இருந்ததன் காரணமாகவும் சளி, காய்ச்சல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகமாகவே உள்ளன. ஆனால் இனி வெயில் வரப் போவதாக வானில மையம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இனி் வறண்ட வானிலை அதிகரிக்கும் என்றும் வெயில் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குளிர்காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. எனவே அடுத்து வெயில் காலம் தொடங்கி விடும். படிப்படியாக வெயிலின் அளவு அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


TN may face the acute summer this season as the weather office has predicted for the Immense Summer this time.

Category

🗞
News

Recommended