'சூப்பர் கேர்ள்' எனும் அமெரிக்க சீரியல் உலகம் முழுவதும் பிரபலம். இந்த சீரியலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலின் புதிய சீசனில் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். லண்டன் பெண்ணான எமி ஜாக்சன், படங்களில் எவ்வளவு கவர்ச்சியாக வேண்டுமானாலும் நடிக்கச் சம்மதிப்பவர். இவர் நடித்திருக்கும் 'சூப்பர்கேர்ள்' சீரியலின் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் நடித்திருக்கும் லிப் லாக் காட்சி யூ-ட்யூபிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. 'மதராசப்பட்டினம்' படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் 'ஐ' படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். இவர் தற்போது ரஜினிகாந்திற்கு ஜோடியாக '2.O' படத்தில் நடித்துள்ளார். பிரிட்டன் மாடலாகவும் வலம் வரும் இவர் பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து அவர்களின் புதிய வியாபாரப் பொருட்களுக்கு விளம்பரத் தூதுவராகவும் இருந்து வருகிறார். தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட படங்களில் கமிட்டான எமி, சில நாட்களுக்கு இந்திய சினிமாவில் இருந்து விடைபெற்று ஹாலிவுட் சீரியல்களில் தலைக்காட்ட முடிவெடுத்தார். அதன் முதல் கட்டமாக 'சூப்பர் கேர்ள்' சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருக்கும் எமி முதல் எபிஸோடிலேயே லிப்லாக் அடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ள்ளார்.
'Super Girl' American serial starring Amy Jackson's first episode telecast. Amy Jackson lip locked with Hollywood actor Mon El in her first episode.
'Super Girl' American serial starring Amy Jackson's first episode telecast. Amy Jackson lip locked with Hollywood actor Mon El in her first episode.
Category
🗞
News