• 7 years ago
'பாகுபலி' படத்தின் மூலம் சினிமாவில் பெரும் உயரத்துக்குச் சென்றவர் நடிகை அனுஷ்கா. இன்னும் 'பாகுபலி' படத்தில் தேவசேனாவாக நடித்த அவரது தோற்றமும், காட்சிகளும் பலராலும் மறக்க முடியாது.

இப்படம் உலக அளவிலும் வரவேற்பை பெற்று இன்னும் வசூலில் பல சாதனைகள் புரிந்து கொண்டிருக்கிறது. அவரின் சினிமா கேரியரில் 'அருந்ததி', 'பாகுபலி' ஆகிய படங்கள் முக்கிய இடங்களைப் பிடித்துவிட்டன.

இதனைத் தொடர்ந்து அவர் காமெடியும் திகிலும் கலந்த கதையான 'பாகமதி' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அனுஷ்காவுடன் ஆதி, உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷா சரத் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி இருக்கிறது. இப்படத்தை அஷோக் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக நானியை வைத்து, 'பிள்ள ஜமீன்தார்' என்ற தெலுங்கு படத்தை இயக்கியுள்ளார்.

'பாகுபலி' போலவே இதிலும் சில கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றனவாம். படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், 'பாகமதி' படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.


Anushka shetty has acted in a comedy + horror thriller movie 'Bhaagamathie'. The official trailer of 'Bhaagamathie' has been officially released.

Recommended