அண்ணா 'துரை' விஐய் ஆண்டனிக்கு வெற்றியை தருவாரா?- வீடியோ

  • 7 years ago
ராதிகா சரத்குமாரின் ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் சீனிவாசன் இயக்கியிருக்கும் 'அண்ணாதுரை' இன்று ரிலீஸ் ஆகிறது. சவுண்ட் என்ஜினியராக தமிழ் சினிமாவில் தன் பயணத்தை தொடங்கிய விஐய் ஆண்டனி வெற்றிகரமான இசையமைப்பாளராக வளர்ந்த பின் நடிகராக அறிமுகமான படம் "நான் "தன் முதல் பட தலைப்பிலேயே நான் என அகங்காரத்தோடு நாயகனாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டு எதிர்பாராத சுமாரான வெற்றியை பெற்றார் விஜய் ஆண்டனி. இதுவரை 6 படங்களில் நாயகனாக நடித்திருக்கும் இவர் தன் படங்களுக்கு எதிர்மறையாகவே பெயர்வைத்து மக்களிடம் எளிதில் சென்றடையும் யுக்தியை பயன் படுத்தி வருகிறார் விஐய் ஆண்டனி. இவர்நடிப்பில் நான் (2012) சலீம் (2014) இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் (2015) எமன், சைத்தான் (2016) வெளியான இப்படங்களில் பிச்சைகாரன் தமிழ் , தெலுங்கில் மிகப் பெரும் வெற்றி பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவம் உள்ள நாயகனாக ஆனார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் படத்திற்கு பின் வெளிவந்த எமன், சைத்தான் இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் நஷ்டத்தை ஏற்படுத்தின. அதனால் அண்ணாத்துரை வெற்றி விஐய் ஆண்டனிக்கு அவசியமாகியுள்ளது.

Vijay Antony's 'Annadurai' is produced by 'Radhika Sarathkumar's AR Studios and Fathima Vijay Antony's' Vijay Antony Film Corporation'. This film will be released today, directed by debut director Srinivasan .

Recommended