• 8 years ago
தமிழ் சினிமாவையே மிரட்டி வைத்துக் கொண்டு அடுத்தடுத்த மரணங்களுக்கு காரணமாக இருக்கும் அன்பு செழியன் கும்பலை அடக்க துப்பில்லாமல் வெட்டி வசனம் பேசிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல் ரவுடிகளுடன் கை கோர்த்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்தவர் அன்புசெழியன். மதுரை பகுதியில் வட்டி தொழிலில் ஈடுபட்டு வந்த அன்புசெழியன் சினிமா உலகுக்குள் நுழைந்து கந்துவட்டி தொழிலில் கொடிகட்டிப் பறந்தார்.எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அன்பு செழியன் ஆளும் கட்சிதான்.. இவரிடம் பணம் வாங்கியவர்கள் கந்து வட்டி கொடுமையால் இழந்தது எல்லாவற்றையும்தான்.

முதுபெரும் தயாரிப்பாளர் ஜி.வி. தூக்கிட்டு மறைவதற்கு காரணமே அன்பு செழியனின் அடாவடி வக்கிரம்தான். ஆண்களையும் பெண்களையும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தி சொத்துகளை சூறையாடுவது என்பதுதான் அன்புசெழியனின் ஸ்டைல்.
தமிழ் சினிமாவில் அக்கப்போருக்கு ஆயிரம் சங்கங்கள் இருந்தாலும் அவை அனைத்துமே அன்புசெழியனுக்கு முன்னால் செல்லாக்காசுதான்.. சினிமாவிலும் மீடியாவிலும் வெட்டி வசனம் பேசமட்டுமே இந்த சினிமா சங்க நிர்வாகிகள் லாயக்கு என்கிறார்கள்.

Tamil Cinema has urged that the strong action agains the financier Anbu Chezhiyan for horror har@ssment.

Category

🗞
News

Recommended