அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும் அவ்வப்போது தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நெப்போலியன், அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். கைபா பிலிம்ஸ் தயாரித்துள்ள 'டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்' என்ற படத்தின் மூலம் அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஒரு எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூகநீதி துறை இணையமைச்சராகவும் உயர்ந்து சாதனை புரிந்தவர். இந்தப் படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற முக்கியமான வேடமேற்றிருக்கிறார். குற்றப் பின்னணியுடைய இக்கதைக்கு தனித்துவமான அமானுஷ்யங்கள் திகில் சேர்க்கிறது. இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் சாம் லோகன் கலேகி இயக்கியுள்ளார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற முக்கியமான வேடமேற்றிருக்கிறார். குற்றப் பின்னணியுடைய இக்கதைக்கு தனித்துவமான அமானுஷ்யங்கள் திகில் சேர்க்கிறது. இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் சாம் லோகன் கலேகி இயக்கியுள்ளார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், இத்திரைப்படத்தின் மூலம் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் உள்ளார் ஸ்விப்ட்டி மக்வே. இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் நடிகராக அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு ஆடி, போர்ப்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப்படம் தயாரிக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் இஸ்தவன் லேட்டங். அதே உயர்தரத்திலான ஒளிப்பதிவு சாதனங்களை இத்திரைப்படத்திற்கும் உபயோகித்துள்ளதால் தரம் பெரிதும் பேசப்படும் என்கிறார். பெண்களை முன்னிலைபடுத்தும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஒரு க்ரைம்/ அமானுஷ்ய கூட்டணி களமிறங்குகிறது.

Category
🗞
News