• 7 years ago
கம்பெனி புரொடக்க்ஷன் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் விஷால் தேர்தல் விவகாரத்தில் மறந்தே போனார்கள் மக்கள். தாரை தப்பட்டை படத்திற்கு வாங்கிய ரூ 18 கோடி பணத்தை பைனான்சியர் அன்புச் செழியனுக்கு திருப்பித் தருவதில் சுணக்கம் காட்டியதால் தன் அதிகார மையமான விநியோகஸ்தர் கூட்டமைப்பு மூலம் கொடிவீரன் ரீலீசுக்கு முட்டுக்கட்டை போட்டார் அன்பு.
இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், மன அழுத்தத்தால் கொடிவீரன் இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார், கடிதம் எழுதி வைத்துவிட்டு. இதற்கு காரணம் அன்புச் செழியன்தான் என அக்கடிதத்தில் அசோக்குமார் குறிப்பிட, அதன் பேரில் அன்பு மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று திரையுலகில் பலரும் குரல் கொடுத்தனர். அன்புச் செழியன் நல்லவர் என கூறி பலர் பேசினார்கள். இதற்கிடையில் உணர்ச்சிவசப்பட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டது விரும்ப தகாதசெயல்தான், அதற்கு அன்பு செழியன் எப்படி காரணம் ஆக முடியும் என்று அவர் சார்பில் சசிக்குமார் தரப்புடன் பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வந்தனர். கொடிவீரன் ரீலீஸ் செய்வதற்கு அன்புச் செழியன் தடைக் கல்லாக இருக்க மாட்டார். அசோக்குமார் தற்கொலைக்கு அவர்தான் காரணம் என்பதை வலியுறுத்தக்கூடாது என பேசப்பட்டதாகத் தெரிகிறது. தற்போது இந்த சமரச முடிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. சசிக்குமார் கையெழுத்திட்டுக் கொடுத்திருந்த டாக்குமெண்ட், மற்றும் சொத்து பத்திரங்கள் அனைத்தையும் அன்புச் செழியன் திருப்பிக் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

Category

🗞
News

Recommended