• 7 years ago
சனிபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசியில் அமர்கிறார். இரண்டரை ஆண்டுகாலம் அந்த ராசியில் அமர்ந்து நன்மை தீமைகள் கலந்த பலனை தருகிறார். ஏழரை சனி என்று பார்த்தால் விருச்சிக ராசிக்கு பாதச்சனி, தனுசு ராசிக்கு ஜென்மசனி, மகர ராசிக்கு விரைய சனி காலமாகும்.

ஜாதகரின் ஜன்ம ராசிக்கு பன்னிரெண்டாவது ராசி, ஜன்ம ராசி, ஜன்மராசிக்கு இரண்டாவது ராசி ஆகிய ராசிகளில் சனி சஞ்சரிக்கும் பொழுது ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் என்ற கணக்கில் ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.கிரகங்களில் சனிக்கு மட்டும் சனைச்சரன் என்று பட்டம் அளித்ததிலிருந்து சனியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். சனி பிற கிரகங்களை விட மிகவும் மெதுவாக நகர்கிறது. வான் மண்டலம் பன்னிரெண்டு ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியிலும் சுமார் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்கிறார்.

கோச்சாரத்தில் ஜாதகரின் ராசிக்கு மூன்று,ஏழு,பதினொன்று ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களை தருவார். ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது. அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை 'விரயச் சனி' எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை 'ஜென்மச் சனி' என அழைப்பர். அதன் பின் ஜென்ம ராசிக்கு 2ஆமிடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை வருட மூன்றாம் கட்டச் சனியை 'பாதச் சனி' என்றும் அழைக்கிறார்கள். இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும்.

ஜன்ம ராசிக்கு ஏழாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது கண்டக சனி என்று அழைக்கப்படுகிறது. ஜன்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. ஜன்ம ராசிக்கு நான்காவது ராசியில் சனி சஞ்சரிக்கும் பொழுது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது. மேற்கண்ட ராசிகளை தவிர்த்து ஐந்து, ஒன்பது,பத்து ஆகிய ராசிகளில் பொதுவாக சனி நல்ல பலன்களையே தருவார் என்பது நம்பிக்கை.
மேற்கண்டவாறு கணக்கிட்டு பார்க்கும் பொழுது ஜன்ம சனி, கண்டக சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என நான்கு இடங்களில் பத்து வருடங்கள் வீதம் மூன்று சுற்றுகளில் மொத்தம் முப்பது வருடங்கள் சனியால் கஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தான் முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.

The planet Saturn is called Shanaiswara. The name Shanaiswara means "slow mover." Shanaiswara, or Shani, Saturn completing one cycle every 30 years.Worship Lord Hanuman by chanting his mantras on Saturday and lighting a ghee lamp in front of the idol.

Recommended