• 7 years ago

நடிகை ஸ்வாதிஷ்டா, இன்ஜினியரிங் படிச்ச மீடியா பொண்ணு. பிரபல தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்தவர் சினிமாவில் வாய்ப்புப் பெற்று நடிகையானார்.
மிஷ்கின், ராம், பூர்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சவரக்கத்தி' படத்தில் முக்கியமான ரோல். ஜீவாவின் 'கீ' படத்தில் சூப்பரான கேரக்டர் என அடுத்தடுத்து சினிமாவில் வளர்கிறார்.
'மெட்ராஸ் சென்ட்ரல்' சேனலின் 'Half boil' வெப் சீரிஸில் நடித்து இளைஞர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். சினிமாவில் தனது ஆசை பற்றி நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
"பி.ஜி படிச்சிட்டு இருக்கும்போது நியூஸ் 7 டி.வி-யில் ஆங்கரிங் பன்ணிட்டிருந்தேன். அப்போ, நிறைய சினிமா பிரபலங்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. சில டைரக்டர்கள் மூலமா சினிமா வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனா, அப்போ நடிக்கிறதுல இன்ட்ரெஸ்ட் இல்ல. 'பிசாசு' படம் வந்த சமயத்தில் மிஷ்கின் சார் இன்டர்வியூ பண்ணேன். அப்போ என்னை சினிமாவுக்கு வரலாமேன்னு கூப்பிட்டார். அப்படி வந்ததுதான் 'சவரக்கத்தி' சான்ஸ்." "நாங்க தமிழ் ஃபேமிலி கிடையாது. தாய்மொழி கன்னடம். அப்பா, அம்மா ரெண்டுபேரும் இங்கேயே செட்டில் ஆனதால், நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தான். இன்ஜினியரிங் முடிச்சிட்டு போஸ்ட் ஜர்னலிசம் படிச்சேன். மீடியாவில் வொர்க் பண்ணிக்கிட்டே காலேஜ் முடிக்கிற நேரத்துல 'சவரக்கத்தி' படம் வந்தது. சரி, அந்தப் படம் மட்டும் பண்ணலாம் அப்படின்னு நெனைச்சேன். அதை முடிக்கிறப்போ, 'மதம்', 'கீ' னு வரிசையா வாய்ப்பு வந்தது. சரி, ட்ரை பண்ணலாமேன்னு அப்படியே இறங்கியாச்சு."
"இப்போ கூட சினிமாவுல பெரிய ஃபியூச்சர் பிளான்லாம் வச்சுக்கலை. ஜீவா நடிக்கிற 'கீ' படத்திலேயும், 'மதம்'னு ஒரு படத்திலேயும் நடிச்சிருக்கேன். ரெண்டு படமும் ஷூட்டிங் முன்னாடியே முடிஞ்சிடுச்சு. 'கீ' படத்தில் ஸ்ட்ராங்கான ஒரு கேரக்டர் பண்றேன். 'மதம்' படம் கமர்ஷியல் கிடையாது. ஆர்ட் ஃபிலிமா இருக்கும். அதில் ஹீரோயின் ரோல் பண்ணியிருக்கேன். ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு அனுப்புறதுக்காக எடுத்த படம் அது."
'சவரக்கத்தி', 'மதம்', 'கீ' மூணு படமும் முடிச்சதுக்கு அப்புறம் தான் வெப் சீரிஸ் பண்ணேன். மூணு படங்களுமே கொஞ்சம் லேட் தான். வெப் சீரியல்ல என் நடிப்பு பெரும்பாலானோரால் பாராட்டப்பட்டது. ரசிகர்கள் என் நடிப்பைப் பாராட்டி கமென்ட் பண்ணாங்க. தியேட்டர்ல வந்து படம் பார்க்கிறதை விட மொபைல் போன்லயோ, சிஸ்டம்லயோ வெப் சீரிஸ் பார்க்கிறது ஈஸியா இருக்கும் இல்லையா? வெப் சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு."
"சமீபத்துல பார்த்த படங்கள்ல 'அருவி' ரொம்ப பிடிச்சது. இந்த மாதிரி படத்தில் நடிக்க நிஜமா ரொம்ப தைரியம் வேணும். ஹீரோயினுக்கு எய்ட்ஸ் நோய் அப்டிங்குறதுதான் ஒன்லைன். அதைக்கேட்டதுமே பல ஹீரோயின்ஸ் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க. அதிதி அந்த ரோல் பண்ணினதுல ரொம்ப சந்தோஷம். என்னைப் பொறுத்தவரைக்கும் ஹீரோயின்னா அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு பிரின்ஸிபல்லாம் இருக்கக் கூடாது. இந்த மாதிரி எனக்கு சான்ஸ் கிடைச்சதுனா கண்டிப்பா பண்ணுவேன்."
"எனக்கு கோவம் ரொம்ப ஈஸியா வந்துடும். அதனால், 'பை' (Bye) தான் நிறைய யூஸ் பண்ணுவேன். பேசிட்டே இருக்கும்போது டென்ஷன் ஆனா, 'ஓகே பை, போன வை', அந்த மாதிரி கான்வெர்சேஷன் கட் பண்ற வார்த்தை தான் அடிக்கடி யூஸ் பண்றேன். அது ரொம்ப தப்பான விஷயம்தான்னு எனக்கே தெரியுது. அதைத் தவிர்க்க முயற்சி பண்றேன்."
" 'Just when the caterpillar thought the world was ending, he turned into a butterfly' - கம்பளிப்பூச்சிகள், உலகம் அழியப்போவதாக நினைக்கும்போது, கடவுள் அவற்றை பட்டாம்பூச்சிகளாக மாற்றிவிட்டார்'னு ஒரு வாசகம். அது எனக்கு ரொம்ப இன்ஸ்பயரிங்கா இருக்கும்."


Actress Swathishta shares her cinema entry and career development. An exclusive interview of Swathishta is here.

Category

🗞
News

Recommended