• 8 years ago
2ஜி வழக்கு டெல்லியில் இருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று கனிமொழி நீதிமன்றதிற்கு வந்து இருந்தார். இன்று தீர்ப்பு நாள் என்பதால் அந்த பகுதியே மிகவும் பரபரப்பாக இருந்தது. என்ன மாதிரியான தீர்ப்பு வெளியாகும் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது. இத்தனை களேபரங்களுக்கும் மத்தியிலும் கனிமொழி அணிந்திருந்த புடவை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கருப்பு சிவப்பு கலரில் இருக்கும் அவரது புகைபடம் வைரல் ஆகி இருக்கிறது.

பல வருடங்களாக இந்தியாவே காத்திருந்த 2ஜி வழக்கிற்கு இன்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றச்சாட்டப்பட்டு இருந்த கனிமொழி, ராசா உட்பட 14 பேரும் குற்றவாளிகள் இல்லை என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த 14 பேருக்கும் எதிராக சரியான ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை என்று நீதிபதி ஓ.பி. சைனி தெரிவித்தார்.

தீர்ப்பு நாளுக்காக கனிமொழி காலையிலேயே நீதிமன்ற வளாகத்தில் ஆஜராக இருந்தார். நீதிமன்றத்திற்கு அவர் இந்த முறை கருப்பு சிவப்பு ஆடையில் வந்து இருந்தார். திமுக கட்சி கோடி போலவே இருந்த அந்த புடவை அனைவரது கண்களையும் கவர்ந்தது.



Delhi CBI court released all 14 who were accused in 2 G spetrum case. Kanimozhi came in red and black saree to the court.

Category

🗞
News

Recommended