• 6 years ago
பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல.. ஸாரி பாஸ் நீங்க நினைக்கும் பெயர் இல்லை இது... இது தினகரன். ஆச்சரியமா இருக்குல்ல.. தென் மாவட்டங்கள் பக்கம் போய்ப் பாருங்க.. தினகரன் பெயருக்கு அப்படி ஒரு சப்போர்ட் குவிந்து கொண்டுள்ளது. ஜாதி ரீதியான ஆதரவுதான் இது என்றாலும் கூட ஒட்டுமொத்த அதிமுகவையும் மெல்ல வளைத்து வருகிறார் தினகரன். இது இயல்பானதுதான். ஆர்.கே.நகரில் தினகரன் வாங்கிய வெற்றியானது தற்போது அவருக்கு முழுமையாக சாதகமாகத் திரும்பிக் கொண்டுள்ளது.அதேசமயம், தினகரனை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஜெயலலிதாவையே தூக்கிச் சாப்பிடக் கூடிய அளவுக்கு திறமையானவர் என்று அவரை எம்பியாக பார்த்து ரசித்த தேனி மாவட்ட மக்கள் சிலாகித்துக் கூறுகிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தட்டுத் தடுமாறி தள்ளாடிக் கொண்டுள்ளது. அதன் தலைமைப் பொறுப்புக்கு இன்னும் யாரும் நிரந்தரமாக அமர்ந்தபாடில்லை. சசிகலா வந்தார். அவர் சிறைக்குப் போன பின்னர் தினகரன் கைப்பற்ற முனைந்தார். ஆனால் முடியவில்லை.

விலையில்லா திட்டங்கள் பலவற்றை கொடுத்த ஜெயலலிதாவுக்குப் பின்னர் தலையில்லா முண்டம் போல மாறி நிற்கிறது அதிமுக. ஒருங்கிணைப்பாளர்கள் என்ற பெயரில் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் அதிமுகவை கையில் வைத்துள்ளனர்.

ஆனால் லகான் விரைவில் தினகரன் கைக்கு மாறும் என்று அதிமுகவினரே பேச ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்ட அதிமுகவினர் பெருமளவில் தினகரன் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர். சாதாரணமாக அல்ல, அலை அலையாக வரத் தொடங்கியுள்ளனராம்.




TTV Dinakaran is getting more and more support in southern districts and no wonder if he could capture the leadership of the ADMK soon.

Category

🗞
News

Recommended