தமிழகத்திற்கு அச்சுறுத்தலாக மாறிவரும் வடமாநிலத்தவர்கள்- வீடியோ

  • 7 years ago
தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் வடமாநிலத்தவரின் வருகை என்பது நாளுக்கு நாள் கணக்கிட முடியாததாக மாறி வருகிறது. இவர்களில் கொள்ளையர்கள் யார், பிழைப்பு தேடி வருபவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் நீடிக்கிறது. தமிழகத்தில் வடமாநிலத்தவர் பணியாற்றுவது என்பது ஓட்டல், அழகு நிலையங்கள் என்று தான் தொடக்க காலத்தில் தொடங்கியது அவர்களின் வருகை. மொழி புரியாது, சொல்வதைச் செய்வார்கள், பல மணி நேரம் வேலை வாங்கலாம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் மக்களின் வேலைகளை பறித்து வடமாநிலத்தவர்க்கே வழங்கி வந்தனர் முதலாளி வர்க்கத்தினர்.

இதனையடுத்து கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் வடமாநில ஆட்களை பணியில் அமர்த்தத் தொடங்கின. கோவை, திருப்பூர் பகுதிகளிலும் வடமாநிலத்தவரின் நடமாட்டம் என்பது தற்போது அதிகரித்துள்ளது. பனியன் கம்பெனிகள், தொழிற்சாலைகளில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இளைஞர்கள், குடும்பத்துடன் வந்து தங்கி பணியாற்றுதல் என்று இவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமே உள்ளது.

எந்த மாநிலத்தவரும் எங்கும் சென்று பணியாற்றலாம் இதில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது தான். ஆனால் வடமாநிலத்தவரின் வருகையால் உள்ளூர் மக்களின் பிழைப்பு பறிபோனது. மற்றொரு புறம்இவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்ற எந்த தகவலும் இல்லை.


North Indians coming to Tamilnadu for jobs is increasing recent times, meanwhile the robberies and heavy weapons usage also increased because of them. How Government is going to control them is the biggest question now?

Category

🗞
News

Recommended