தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு சலுகைகள்- வீடியோ

  • 7 years ago
தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் என்றும், கல்வித்துறையில் பல புதிய திட்டங்கள் செயல் படுத்தப்படுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க முதல்வர், மற்றும் துணை முதல்வர் ஆகியோரிடம் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த விருதுக்காக மாவட்டம்தோறும் 30 மாணவர்கள் வீதம் 960 பேருக்கு இந்த விருது வழங்கப்படும் என்றும், விருதுடன் பரிசுத்தொகையாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 10 ஆயிரமும், 12 வகுப்பு மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

10 வகுப்பு முடித்து சிறந்த கல்வியை தேர்ந்தெடுக்கப்பட்ட 286 பாடப்பிரிவுகள் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் குழப்படையாமல் தேர்ந்தெடுக்க உதவ முடியும் என்றும், லேப்டாப் கிடைக்காத மாணவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

Recommended