• 6 years ago
தூய்மையின் அடையாளமாக கருதப்படும் தும்பைச் செடி இனத்தில், மற்றொரு நன்மை தரும் செடியும் உண்டு, அதுதான், பேய்மிரட்டி எனும் பெருந்தும்பை.

நாம் சில அரிதான செடிகளை, மனிதர்களுக்கு மிகுந்த நன்மைகள் அளிக்கும் மூலிகைகளை பெரும்பாலும் சாலையோரங்கள், வயல்வெளிகள் மற்றும் தோட்டங்களில் சர்வசாதாரணமாகக் கண்டு வந்திருப்போம். ஆனால், அதற்கெல்லாம் விதிவிலக்கு, இந்தப் பேய்மிரட்டி, வெகு எளிதில் நம் கண்களில் படாது, மிக அரிதாக புதராக மற்ற செடிகள் மண்டியிருக்கும், ஒருசில இடங்களில் மட்டும் காணப்படும் இந்த அரிய நன்மைகள் மிக்க பேய்மிரட்டி செடி.

சற்றே நீண்ட இளம்பச்சை வண்ண நிறமுடைய இலைகளையுடைய பேய்மிரட்டியின் மலர்கள் வெளிர் ஊதா போன்ற வயலெட் வண்ணத்தில் கொத்துக்களாக மலர்ந்திருக்கும். அதிக தண்ணீர் தேவையின்றி வறட்சியிலும் வாடாமல் வளரும் பேய்மிரட்டி செடி, அதிக உயரம் வளர்வதில்லை, மூன்றடி மட்டுமே வளரும் தன்மை உடையது.

சற்றே சுவாசத்திற்கு இடையூறான வாடையைக் கொண்டிருக்கும் இந்தச்செடிகளை அவற்றின் நெடி காரணமாக, மலத்தைக் குறிக்கும் பேச்சு மொழியில், கிராமங்களில் கொச்சையாக, இந்த செடியை பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

பேய்மிரட்டி செடியில், ஆற்றல்மிக்க அனிசொமிக், ஜெரானிக் மற்றும் லுட்டுலினிக் போன்ற அமினோ அமிலங்களும், சைட்டோஸ்டீரால் போன்ற நலம் தரும் தாதுக்களும் அடங்கியுள்ளன.

How to use Anisomeles Malabarica, to stay away from diseases and give positive thoughts

Category

🗞
News

Recommended