திரைப்பட நடிகை ஒருவருடன் இந்த நித்யானந்தா உல்லாசமாக இருப்பதுபோல ஏழு ஆண்டுகளுக்குமுன் வெளியான 'வீடியோ' உண்மையானதுதான் என டெல்லி தடயவியல் ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை பாய வேண்டும் என கி. வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்யானந்தா என்ற ஒருவர் வேலையற்றுத் திரிந்த இளைஞன். சாமியார் 'பிசினஸ்'தான் முதலில்லா வியாபாரம் என்று புரிந்துகொண்டு, காவி வேடம் போட்டு, மிகப்பெரிய மடாதிபதிபோல் தன்னைக் காட்டிக்கொண்டார்.
இதன் மூலம், பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து, தன்னுடன் ஒரு ரவுடிக் கும்பல், அடியாட்களை வைத்துக்கொண்டு தனது சாம்ராஜ்ஜியத்தை சல்லாப ராஜ்ஜியமாக்கிக் கொண்டு சொகுசு வாழ்வு வாழ்வதுபற்றி ஏடுகள் பல செய்திகளை வெளியிட்டன.குடும்பத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மூளைச்சாயம் ஏற்றி, அழைத்து வருவது, அங்கே ‘ஆன்மீகம்‘ என்ற பெயரால் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவது வேடிக்கையான வாடிக்கையாகும். இப்படிப்பட்ட நவீன சாமியார்கள் மின்னணு யுகத்தில் வாழ்வதால், அத்தனை மின்னணு (Electronic Gadgets) கருவிகளையும் தங்களை விளம்பரப்படுத்திட புது வகை டெக்னிக்குகளைக் கையாண்டு, அறியாமையிலும், பக்தி போதையிலும் உழலும் பல பெண்களின் வாழ்வை நாசமாக்கும் சமூக விரோத செயல்களைத் தங்கு தடையின்றி நடத்தி, சுகபோக வாழ்வு வாழ்கின்றனர்!
திரைப்பட நடிகை ஒருவருடன் இந்த நித்யானந்தா உல்லாசமாக இருப்பதுபோல ஏழு ஆண்டுகளுக்குமுன் வெளியான ‘வீடியோ' உண்மையானதுதான் என டெல்லி தடயவியல் ஆய்வின்மூலம் தெரிய வந்துள்ளது! இதையடுத்து அந்த நித்யானந்தா தலைமறைவானார். பிறகு திருவண்ணாமலை அருகே கருநாடகக் காவல்துறை கைது செய்து வழக்குப் போட்டது. மக்களும், முற்போக்கு அமைப்புகளும் இந்த காஷாய சாமியார் வேடமணிந்த நபருக்கு எதிராக கிளர்ச்சிகளை நடத்திய பின்னரே இவர்மீது வழக்குப் பாய்ந்தது! உச்சநீதிமன்றம்வரை சென்று, இவருக்கு ஆண்மைப் பரிசோதனைகூட நடத்தப்பட்டதுண்டு. ஆண்மை இல்லை என்ற இவரது வாதம் பொய்யானது என்பது உறுதியானது.
ஏழு ஆண்டுகளுக்குமுன் நடிகையுடன் சல்லாப சரச லீலையில் ஈடுபட்டதையெல்லாம் - அவரது காரோட்டி லெனின் கருப்பையாமூலமும், வீடியோ மூலமும் வெளியானது. போலி என்ற இவர் தரப்பு வாதம் பொய்யாக்கப்பட்டு, அது உண்மைதான் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இவரையும், இவரது கும்பலையும் உடனே கைது செய்து, சிறையில் அடைப்பதோடு உரிய தண்டனையும் வழங்கப்படவேண்டும். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள்மீது நடத்தப்படும் சோதனைபோல, வருமான வரித்துறை இந்த மடாதிபதிகளின் கூடாரங்களிலும் சோதனை நடத்திடவேண்டும். காலிகள், சமூக விரோதிகளுக்கு இந்தக் காவி உடையும், ருத்ராட்ச வேஷமும் சரியான பாதுகாப்புக் கவசங்கள் - ‘ஆன்மீகம்‘ என்ற அர்த்தமற்ற ஒன்றைக் கூறி, அமோக பக்தி வியாபாரம் நடைபெறுகிறது தங்குத் தடையின்றி!
K.Veeramani asking government to take action against Nithyananda as his se scandal video proven true.

Category
🗞
News