• 6 years ago
தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்பவருக்கு கோடிக் கணக்கில் பரிசு அளிக்கப்படும் என்று கான்பூரை சேர்ந்த அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவத் படம் பெரும் சர்ச்சைக்கு இடையே ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகவில்லை. அந்த மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தென்னிந்தியாவில் பத்மாவத் படத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. பத்மாவத் ஓடும் தியேட்டர்களில் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் குருகிராமில் போராட்டம் பெரிய அளவில் வெடித்துள்ளது. பத்மாவத் படத்தில் ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி தான் இந்த அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அப்படி எதுவும் தவறாக சித்தரிக்கவில்லை என்று பத்மாவத் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி எத்தனையோ முறை தெரிவித்தும் அதை யாரும் நம்ப தயாராக இல்லை.

Kshatriya Mahasabha, a fringe outfit in Kanpur has announced that it will give a huge cash reward for anyone who would chop off Bollywood actor Deepika Padukone's nose.

Recommended