• 6 years ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'மெர்க்குரி' திரைப்படம் தமிழகத்தில் நேற்று முதல்
திரையிடப்பட்டு வருகிறது. சைலன்ட் த்ரில்லர் படமான 'மெர்க்குரி' ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று

வருகிறது. மூடப்பட்ட மெர்க்குரி தொழிற்சாலையின் பின்னணியில் வைத்துப் பேசப்படும் இந்தக் கதையில்

கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல் மக்களுக்கு எப்படி பாதிப்புகளை விளைவிக்கிறது என வசனம்

இல்லாமல் விளக்கப்பட்டிருக்கிறது.

மெர்க்குரி ஆலைக் கழிவுகளால் கொடைக்கானல் பகுதி மக்களுக்கும், நிலத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டதை

அந்தப் பகுதி மக்களே அறியாத அவலமும் நம் தமிழகத்தில் நடந்தேறியது. அந்தளவுக்குத் தான் வேதிப்

பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் திட்டம்,

கூடங்குளம் அணுமின் திட்டம், டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன்

திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம் என தமிழகத்தில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வேதிப்

பொருட்கள் தொடர்பான திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக மக்கள் சமீபமாகத்தான்

கிளர்த்தெழத் தொடங்கியிருக்கிறார்கள். கார்ப்பரேட் அரசியலை மையமாக வைத்து, செயல்படாத மெர்க்குரி

ஆலையின் பின்னணியில், அந்த ஆலையால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி கதையை நகர்த்தி

இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அந்த மெர்க்குரி ஆலைக்குப் பெயரே கார்ப்பரேட் எர்த் என்பது தான்.



Karthik Subbaraj's 'Mercury' movie is being received by fans. The story, which focuses on the corporate politics and the backdrop of the closed Mercury factory.

Recommended