கூகுள் மேப் மூலமாக கண்டறியப்பட்ட சில வினோதமான பகுதிகள்- வீடியோ

  • 7 years ago
உலகில் சுவாரஸ்யங்களுக்கும், விசித்திரங்களுகும் பஞ்சமே இல்லை. நாம் கண்டுப்பிடித்த, கண்டுப்பிடிக்காத, மர்மமாக நீடிக்கும் பல உலக வினோதங்கள் இருக்கின்றன. ஆனால், கூகுள் எர்த் மாறும் மேப்பில் நாம் உலக மக்கள் அறியாத பல விசித்திரமான இடங்கள் பதிவாகியிள்ளன. இப்படி சில இடங்கள் இருக்கிறது என அந்தந்த ஊரில் வாழும் மக்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம்.

ஆங்கிலத்தில் Aerospace Maintenance and Regeneration Group (AMARG) என்றழைக்கப்படும் இந்த இடமானது ஒரு விண்வெளி பராமரிப்பு மற்றும் மீளுருவாக்கம் குழு அமைப்பிடம் ஆகும். இது தான் உலகின் மிகப்பெரிய விமான மயானம் என்று அழைக்கிறார்கள். இது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் இருக்கிறது. இங்கே எப் 16 , எப் 4 பாண்டாம் IIஎஸ் மற்றும் பி 52 ரக வெடிகுண்டு வீசும் பழுதடைந்த பழைய விமானங்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளன. வரலாறு சார்ந்த பெரும் ஈர்ப்பு கொண்ட நபராக நீங்கள் இருந்தால், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரில் முக்கிய பங்கு வகித்த பல விமானங்களை நீங்கள் இங்கே சென்று காணலாம்.

ஐக்கிய ராஜ்ஜியத்தின் டன்ஸ்டாபில் (Dunstable) என்ற பகுதியில் இருக்கிறது இந்த லயன் பாயிண்ட். இது ஒரு பயிரடம் ஆகும். இங்கே சிங்கத்தை போன்ற உருவத்தில் புற்கள் முளைந்த இடத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது வூட்ஸ்நேட் மிருகக்காட்சி சாலைக்கு அருகமையில் இருக்கிறது.

Recommended