விஜய் டி.வி-யில் சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே செம வரவேற்பு பெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது தொடங்கும், யார் நடத்துவது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அதே போலொரு நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. அழகான 12 நகரத்து பெண்கள் 45 நாட்கள் கிராமத்து வாழ்க்கை வாழ்வது தான் இந்த நிகழ்ச்சியாம். மக்களைக் கவரும் வகையில் வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. மிகுந்த வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரிசையில் அடுத்து "வில்லா டு வில்லேஜ்" என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது. நவீன நகரத்து வாழ்க்கையில் வாழும் 12 அழகான பெண்கள் இந்த ரியாலிட்டி நிக்ழச்சியில் கலந்துகொள்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு கிராமத்திற்கு அழைத்து செல்லப்படுவர். அங்கு அவர்கள் 45 நாட்கள் வெளியுலகத் தொடர்பற்று வாழ வேண்டும். கிராமத்தில் எந்தவித வசதியும் இல்லாமல் வாழ வேண்டும். அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் பணத்தை அங்கே ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். ஒவ்வொரு வார இறுதியில் ஊர் மக்கள் இவர்களுக்கு வாக்கு அளிப்பார்கள். போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும். இந்த ரியாலிட்டி ஷோ ப்ரொமோ மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி-யில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு "வில்லா டு வில்லேஜ்" நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
Fans are looking forward to the next season of the Biggboss show. In this situation Vijay tv starts 'Villa to village' reality show like biggboss. In this program, 12 cute city girls are to live in a village without outdoor contact for 45 days.
Fans are looking forward to the next season of the Biggboss show. In this situation Vijay tv starts 'Villa to village' reality show like biggboss. In this program, 12 cute city girls are to live in a village without outdoor contact for 45 days.
Category
🗞
News