• 7 years ago
மாணவர்களுக்கு செக்ஸ் எஜிகேஷன் மிகவும் தேவையான ஒன்று என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்



புதுக்கோட்டையில் சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்த சீனிவாசன் இறந்ததையடுத்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்த வந்த அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அருப்புக்கோட்டை பெண் பேராசிரியை மாணவிகளிடம் நடத்திய சர்ச்சைக்குறிய உரையாடல் வழக்கில் ஆளுனர் ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறார் என்று தெரியவில்லை என்றும் தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் ஆளுனர் இது போன்று அவசரம் காட்டுவது தான் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார் மேலும் வரும் 25 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரதபோரட்டம் நடத்தப்பட உள்ளது என்றும் நாட்டில் பெண்களுக்கான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது என்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு செக்ஸ் எஜூகேசன் தேவையில்லை என்று கூறுவது தவறானது செக்ஸ் எஜூகேசன் இருந்தால் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்றும் தெரிவித்தார்.

Category

🗞
News

Recommended