ராசியான கோவிலில் சாமி கும்பிட்ட பிறகு பிரச்சாரத்தை துவக்கினார் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை- வீடியோ

  • 5 years ago

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிடுகிறார். இதற்க்கான பணிகளை துவக்க தேர்தல் பணிமனையை கரூர்- கோவை சாலையில் உள்ள தனியார் இடத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வேட்பாளர் தம்பிதுரை,கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, கூட்டணிகட்சிகளின் மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்தபொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். தேர்தல் பணிமனையில் நிறுவப்பட்டு இருந்த மறைந்ததமிழக முதலமைச்சர்ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கரூர் பாராளுமன்ற தொகுதியில் 6-வதுமுறையாக போட்டியிடும் தம்பிதுரை, ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரச்சாரத்தை கரூரை அடுத்தகோடங்கி பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி கும்பிட்டபிறகேதுவக்குவது வழக்கம். இம்முறையும் கூட்டணிகட்சியினருடன் பட்டாளம்மன் கோவிலுக்கு சென்று சாமிகும்பிட்ட தம்பிதுரை பிராச்சார வாகனத்தில் தனது பிரச்சாரத்தை துவக்கினார். பாராளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகு கரூர் பாராளுமன்ற வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட தம்பிதுரை தனது பிரச்சாரத்தை முறையாக இன்று முதன் முதலாக துவக்கினார். இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளரே அறிவிக்காத நிலையில் அதிமுக தனதுதேர்தல் பரப்புரையை துவக்கி உள்ளது என்பதுகுறிப்பிடதக்கது.

des : The campaign was launched after the Samy Temple in the temple

Recommended