தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பேட்டி- வீடியோ

  • 5 years ago
கரூர் மக்களவைத் தொகுதி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட குஜிலியம்பாறை கடைவீதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை என்பது எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்காக நடத்தப்பட்டது. தனிமனிதனின் செல்வாக்கையும் நம்பகத் தன்மையையும் கெடுக்கும் முயற்சி என்றும். தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த வில்லை என்றும் கூறினார். மேலும் ஆளுங்கட்சிக்கு ஒரு பரிவு எதிர்க்கட்சிக்கு என ஒரு பரிவு பாரபட்சம் காட்டும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது எனக் குற்றம் சாட்டிய அழகிரி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 550 கோடி ரூபாய்க்கு விமானங்கள் வாங்கப்பட்டன ஆனால் இன்று அந்த விமானங்கள் 1600 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

des : Income Tax Check at Duramurugan House was held for the campaign of opposition parties Tamilnadu Congress Committee Chairman Alagiri interviewed.

Recommended